அரக்கோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அரக்கோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2020 7:06 PM IST (Updated: 8 Nov 2020 7:06 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரக்கோணம்,

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் டேவிட் வரவேற்றார். விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, கஜா, பரத், சத்யா, ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை பொதுச் செயலாளர் சுதாகர் கலந்து கொண்டு பேசினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். தமிழகத்தில் தமிழருக்கே வேலை என்ற வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தை மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட தலைவர் கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story