மும்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி


மும்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 9 Nov 2020 3:45 AM IST (Updated: 9 Nov 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

மும்பை,

மும்பை பாங்குர் நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் சந்தீப் ஜாதவ்(வயது58). பயந்தர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்ஸ்பெக்டர் சந்தீப் ஜாதவ் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றார்.

இந்தநிலையில் அக்டோபர் 2-ந் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் உடல்நலம் பெறவில்லை.

இந்தநிலையில் அவர் நேற்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த இன்ஸ்பெக்டர் சந்தீப் ஜாதவிற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்து உள்ளது.

மும்பையில் கொரோனாவுக்கு பலியாகும் 12-வது போலீஸ் அதிகாரி சந்தீப் ஜாதவ் ஆவார். இதேபோல 93 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.

Next Story