தேவைக்கு அதிகமான உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது - கலெக்டர் எச்சரிக்கை
தேவைக்கு அதிகமான உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது என்று கலெக்டர் ஜான் லூயிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் உரங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது, இதில் நெல் ரகங்களான கா-51. என்.எல்.ஆர்- 34449, பி.பி.டி.-5204 மற்றும் எ.டி.டி-37 உள்பட மொத்தம் 350 மெட்ரிக் டன் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 250 மெட்ரிக் டன் தனியார் விற்பனை நிலையங்களிலும் இருப்பில் உள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் சாகுபடியாகும் பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 1800 மெட்ரிக் டன், டி.ஏ.பி 920 மெட்ரிக்டன், பொட்டாஷ் 750 மெட்ரிக்டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 250 மெக்ரிக் டன் தனியார் சில்லரை உர விற்பனை கடைகளிலும் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பில் உள்ளது.
எனவே, விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை பெற்று பயனடையுமாறும் விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் அறிவிப்பு பலகை வைத்து அதில் உரங்களின் இருப்பு விவரங்கள் மற்றும் விலைப்பட்டியல்களை பதிவு செய்து விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும், உர விற்பனையாளர்கள் விற்பனை முனை எந்திரத்தின் முலம் மட்டுமே உரம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த அதிக பட்ச விலைக்கு அதிகமாகவோ, ஒரே விவசாயிக்கு அதிக உர மூட்டைகளையோ மற்றும் விவசாயி அல்லாதவர்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது, மானிய உரங்களை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் கூடாது, உர இருப்பு பதிவேடுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
உரங்களை விற்கும்போது தேவைக்கு அதிகமான உரங்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது, இந்த வழிமுறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்,
இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story