அக்ரஹாரம் தலகாணி தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


அக்ரஹாரம் தலகாணி தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2020 10:33 AM IST (Updated: 9 Nov 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

அக்ரஹாரம் தலகாணி தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பேரூராட்சியை சேர்ந்த 15, 16-வது வார்டுக்கு உட்பட்ட அக்ரஹாரம் தலகாணி தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதேபோல இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாருகாலும் சேதமடைந்து உள்ளது.

இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ஆதலால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது.

மழைக்காலங்களில் கழிவுநீர் வீட்டிற்குள் வந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story