திருச்செந்தூர் போலீஸ் உட்கோட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் 70 மனுக்களுக்கு தீர்வு
திருச்செந்தூர் போலீஸ் உட்கோட்டத்திலுள்ள 6 போலீஸ் நிலையங்களில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கொடுத்த 70 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவிட்டார். திருச்செந்தூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள 6 போலீஸ் நிலையத்தில் சிறப்பு முகாம் திருச்செந்தூர் ஏழூர் சாலியர் மண்டபத்தில் நடந்தது. இதற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கினார்.
மனுக்கள் மீது விசாரணை
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருச்செந்தூர் தாலுகா முத்துராமன், கோவில் போலீஸ் நிலையம் ஞானசேகரன், ஆறுமுகநேரி செல்வி, ஆத்தூர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், குலசேகரன்பட்டினம் ராதிகா, திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பிரேமா ஆகியார் கலந்து கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 50 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட 20 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கூறுகையில், பொதுமக்களிடம் நீண்ட நாட்களாக பெறப்பட்ட 50 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட 20 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. ஆக மொத்தமாக 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.
Related Tags :
Next Story