மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக வீழ்ச்சி புதிதாக 3,277 பேருக்கு மட்டும் பாதிப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக வீழ்ச்சி புதிதாக 3,277 பேருக்கு மட்டும் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2020 12:18 AM IST (Updated: 10 Nov 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. புதிதாக 3,277 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிரடியாக வீழ்ச்சி அடைந்தது. அதன்படி மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 277 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 23 ஆயிரத்து 135 ஆக உயர்ந்து உள்ளது.

சுகாதாரத்துறையின் இணையதள பக்கத்தின் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக பலியானவர்கள் விவரம், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை போன்றவற்றை வெளியிட முடியவில்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தனிமை மையம்

தற்போது மாநிலத்தில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 500 பேர் வீடுகளிலும், 7 ஆயிரத்து 586 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல மாநிலத்தில் இதுவரை 94 லட்சத்து 82 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story