வைரஸ் தொற்றுக்கு மேலும் 19 பேர் பலி கர்நாடகத்தில் புதிதாக 1,963 பேருக்கு கொரோனா பாதிப்பு


வைரஸ் தொற்றுக்கு மேலும் 19 பேர் பலி கர்நாடகத்தில் புதிதாக 1,963 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2020 1:37 AM IST (Updated: 10 Nov 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 1,963 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 887 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 1,963 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 11 ஆயிரத்து 391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். வைரஸ் தொற்றுக்கு நேற்று மேலும் 19 பேர் பலியாயினர். இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 410 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக வைரஸ் பாதித்தவர்களில் பாகல்கோட்டையில் 22 பேரும், பல்லாரியில் 37 பேரும், பெலகாவியில் 34 பேரும், பெங்களூரு புறநகரில் 93 பேரும், பெங்களூரு நகரில் 978 பேரும், பீதரில் 3 பேரும், சாம்ராஜ்நகரில் 12 பேரும், சிக்பள்ளாப்பூரில் 56 பேரும், சிக்கமகளூருவில் 7 பேரும், சித்ரதுர்காவில் 69 பேரும், தட்சிண கன்னடாவில் 18 பேரும், தாவணகெரேயில் 19 பேரும், தார்வாரில் 33 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 48 பேரும், ஹாவேரியில் 13 பேரும், கலபுரகியில் 34 பேரும், குடகில் 14 பேரும், கோலாரில் 52;பேரும், கொப்பலில் 16 பேரும், மண்டியாவில் 73 பேரும், மைசூருவில் 95 பேரும், ராய்ச்சூரில் 20 பேரும், ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 28 பேரும், துமகூருவில் 65 பேரும், உடுப்பியில் 29 பேரும், உத்தர கன்னடாவில் 47 பேரும், விஜயாப்புராவில் 38 பேரும், யாதகிரியில் 3 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் 5 பேர், பல்லாரியில் 3 பேர், தார்வாரில் 2 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். நேற்று 2, 686 பேர் குணம் அடைந்தனர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. 32 ஆயிரத்து 936 பேர் சிகிச்சையில் உள்ளனர். 876 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 84 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 88 லட்சத்து 23 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story