5-வது மாடியில் இருந்து குதித்து என்.எல்.சி. அதிகாரி தற்கொலை


5-வது மாடியில் இருந்து குதித்து என்.எல்.சி. அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2020 3:55 AM IST (Updated: 10 Nov 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள என்.எல்.சி. நிறுவன அலுவலகத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில், வணிக பிரிவின் முதன்மை மேலாளராக சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த எம்.எஸ்.ரகு (வயது 57) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ரகு தனது அலுவலகத்தின் 5-வது மாடிக்கு சென்றார். அங்குள்ள ஜன்னலை திறந்து 5-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பணிச்சுமை காரணமா?

விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், ரகுவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார் ரகுவின் தற்கொலை குறித்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸ்காரர் ஒருவர் கூறுகை யில், ரகுவின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா?, பணிச்சுமை காரணமா? அல்லது உடல்நலக்குறைவு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Next Story