ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
மும்பையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை பைதோனியில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவப்னாலி ஜாங்கலே. இவரிடம் ஒருவர் அடிதடி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்து உள்ளார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தவரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் லஞ்சம் தரவேண்டும் என கேட்டு உள்ளார்.
இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
கைது
பின்னர் பைதோனி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை சந்தித்து ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் மும்பை போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story