கான்பெட் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் போராட்டம்
காரைக்காலில் 10 மாதங்களாக மூடி கிடைக்கும் கான்பெட் பெட்ரோல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால்,
காரைக்காலில் 10 மாதங்களாக மூடி கிடைக்கும் கான்பெட் பெட்ரோல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர்கள் பாஸ்கரன், முகமது யூசுப், பெரியநாயகம், செயலாளர் முருகேசன், பொருளாளர் சதானந்தம், துணை செயலாளர்கள் ஆனந்த், சண்முகம், பாப் வில்லியம், பார்த்திபன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மூடி கிடைக்கும் 3 கான்பெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வேண்டும். நிலுவையில் உள்ள 12 மாத சம்பளம், 2 வருடங்களாக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப் மற்றும் தொகையை செலுத்த வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story