புதுவையில் மேலும் 115 பேருக்கு கொரோனா


புதுவையில் மேலும் 115 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Nov 2020 1:43 AM IST (Updated: 12 Nov 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நைனார்மண்டபத்தை சேர்ந்த 57 வயது பெண் உயிரிழந்தார்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 785 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 196 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 36 ஆயிரத்து 114 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

605 பேர் பலி

அவர்களில் 1,077 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 353 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 725 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 605 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அவர்களில் 497 பேர் புதுச்சேரியையும், 57 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் கொரோனா உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 95.34 சதவீதமாகவும் உள்ளது.

Next Story