மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,000-யை தாண்டியது


மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,000-யை தாண்டியது
x
தினத்தந்தி 12 Nov 2020 2:19 AM IST (Updated: 12 Nov 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,000-யை தாண்டி உள்ளது.

மும்பை, 

மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் சில நாட்களாக பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. நேற்று முன்தினம் 525 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது. இது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. நகரில் புதிதாக 1,069 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 748 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 674 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 15 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

22 பேர் உயிரிழப்பு

இதேபோல நகரில் புதிதாக 22 போ் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 90 ஆக உள்ளது. நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 243 நாட்களாக இருக்கிறது.

Next Story