திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 5:00 AM IST (Updated: 12 Nov 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 ஆயிரத்து 598 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,007 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 636 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 142 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 692 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 694 பேர் உயிரிழந்துள்ளனர். 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 26, 46, 41 வயது ஆண்கள், 11 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 87 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 406 உயிரிழந்துள்ளனர். 494 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story