‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை எதிரொலி: அன்னங்கோவில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை - படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தினர்


‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை எதிரொலி: அன்னங்கோவில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை - படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தினர்
x
தினத்தந்தி 12 Nov 2020 12:00 PM IST (Updated: 12 Nov 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை எதிரொலி காரணமாக அன்னங்கோவில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை அவர்கள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடலோரப் பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. மேலும் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இன்று(வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் கடலூர் உள்பட வட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதில் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில், சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கி ராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமார பேட்டை, மடவாபள்ளம், அன்னப்பன்பேட்டை, அய்யம்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, பேட்டோடை, பெரியகுப்பம். மற்றும் முழுக்கு துறை, எம்.ஜி.ஆர்.திட்டு, சூர்யா நகர், கூழையாரு பட்டரயடி, சின்னவாய்க்கால், பில்லுமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களுடைய படகுகளை மீனவர்கள் பத்திரமாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளார்கள். மேலும் தங்களது வலைகளை சீரமைக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மீன்பிடிக்க செல்லாததால் அன்னங்கோவில் மற்றும் முடசல் ஓடை, எம்.ஜி.ஆர். திட்டு ஆகிய மீன் ஏலம் விடும் தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story