நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்


நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2020 7:19 PM IST (Updated: 12 Nov 2020 7:19 PM IST)
t-max-icont-min-icon

கோவை நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.

கணபதி, 

கோவை நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் சமூக பணியை தொடர்ந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை நல்லறம் அறக்கட்டளை ஆர்வலர்கள் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில், நல்லறம் கோபால் முன்னிலையில் அறக்கட்டளை ஆர்வலர்கள் செய்கின்றனர்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மருத்துவமனையில் கொரோனாவினால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை கோவைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய நல்லறம் அறக்கட்டளையிடம் உறவினர்கள் உதவி கேட்டனர். தொடர்ந்து நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் அறிவுறுத்தலின்படி, பெண்ணின் உடலை பாதுகாப்புடன் கோவை கொண்டு வந்து, நல்லறம் கொரோனா போராளிகள் அடக்கம் செய்தனர்.

பெங்களூர், மதுரை, சென்னை, நெல்லை, சேலம் மற்றும் கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றோர் சடலங்களை நல்லறம் மதனகோபால், நல்லறம் முருகவேல் ஆதரவுடன் மத சடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், நல்லறம் அறக்கட்டளை ஆர்வலர்கள் கோவை பஷீர், ஹைதர்அலி, பி.கே.பைசல், உன்னிகிருஷ்ணன், இஸ்மாயில், டைலர் காஜா, தம்பி அன்சாரி, முகமது தாலிப், கார்த்திகேயன், நவுசாத், சிக்கந்தர், மணிகண்டன், ரியாசுதீன், டைகர் அபூ, சல்மான், அப்துல் ரசீது, ஜிம் நஸீர் ஆகியோர் இணைந்து இந்த பணியினை செய்து வருகின்றனர்.

Next Story