தற்கொலை செய்த அன்வய் நாயக் குடும்பத்தினரிடம் இருந்து முதல்-மந்திரியின் மனைவி ராஷ்மி தாக்கரே நிலம் வாங்கினார்


தற்கொலை செய்த அன்வய் நாயக் குடும்பத்தினரிடம் இருந்து முதல்-மந்திரியின் மனைவி ராஷ்மி தாக்கரே நிலம் வாங்கினார்
x
தினத்தந்தி 12 Nov 2020 10:13 PM GMT (Updated: 12 Nov 2020 10:13 PM GMT)

தற்கொலை செய்த அன்வய் நாயக் குடும்பத்தினரிடம் இருந்து முதல்- மந்திரியின் மனைவி ராஷ்மி தாக்கரே நிலம் வாங்கி உள்ளதாக கிரித் சோமையா குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை, 

அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் டி.வி. சேனல் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

அதில் அவர், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவும், முன்னாள் மந்திரி ரவீந்திர வாய்க்கரின் மனைவி நிதி சவுத்ரியும் ராய்காட்டில் அன்வய் நாயக் குடும்பத்திற்கு சொந்தமான 9.5 ஏக்கர் நிலத்தை கடந்த 2014-ம் ஆண்டு வாங்கி உள்ளனர் என கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரபை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா பதில்

இந்தநிலையில் கிரித்சோமையாவின் புகாருக்கு பதில் அளித்துள்ள மாநில போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப், “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி கிரித் சோமையா மக்களை திசை திருப்ப பார்க்கிறார்” என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து முன்னாள் மந்திரி ரவீந்திர வாய்க்கர் கூறுகையில், “ஒருவர் நிலத்தை விற்கும் போது அதை வாங்குவதில் எந்த தவறும் இல்லை. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை” என்றார்.

Next Story