தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசலால் அவதி
தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடை வீதிகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை,
தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாட ப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு திருவண்ணா மலை நகரை சேர்ந்த பொது மக்கள் பட்டாசு, புத்தாடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள கடை வீதிகளில் குவிந்தனர்.
பட்டாசு கடைகளிலும், ஜவுளிக் கடைகளிலும் மக்களின் கூட்டம் அலை மோதி யது. திருவண்ணாமலை மாட வீதியின் சாலையோரங் களில் ஏராளமான சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து உள்ளனர். திருவண் ணாமலை நகரில் சின்னக்கடை தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை மூலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பொது மக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமின்றி அவதிப்பட்டனர்.
செங்கம், மணலூர்பேட்டை, தானிப்பாடி போன்ற வழித் தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் உள்ளிட்ட வாக னங்கள் தேரடி வீதி, திருமஞ்சன வீதி வழியாக அனுமதித் தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப் பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப் பட்டனர்.
கொரோனா அச்சமின்றி ஆயிரக்கணக்கான பொது மக்கள் கடைவீதிகளில் குவிந் தனர். பெரும் பாலானோர் முகக்கசவம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் காணப்பட்டனர். இதனால் கொரோனா தொற்று அதிக ரிக்கும் அபாயம் ஏற் பட்டு உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பொது மக்களின் கூட்டமும் திருவண் ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அதிகமாக காணப்பட்டது.
Related Tags :
Next Story