அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பெடி உத்தரவு


அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 13 Nov 2020 10:27 PM GMT (Updated: 13 Nov 2020 10:27 PM GMT)

அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரிக் கெட் மைதானம் அமைக்கப் பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை துத்திப்பட்டு கிராமத்தில் சீகெம் டெக்னா லஜிஸ் சார்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மைதானம் அரசு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஊசுட்டேரி பாதுகாப்பு இயக்கத்தினர் தகவல்களை பெற்று கவர்னர் கிரண் பெடியிடம் புகார் அளித்துள்ள னர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி கலெக்டர் அருணு க்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

துத்திப்பட்டில் உள்ள சீகெம் கிரிக்கெட் மைதானம் அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப் பட்டுள்ளது. அங்கு உரிய அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள் ளன. இதுதொடர்பாக உடன டியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதல் தகவல் அறிக்கை

அரசு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்தது தொடர்பாக காவல் நிலை யத்தில் முதல் தகவல் அறிக்கை (வழக்கு) பதிவு செய்ய வேண்டும். அங்கு மேலும் நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உடனடியாக தடை செய்யவேண்டும். மேற்குறிப் பிட்ட விஷயங்கள் அனைத்தும் வருவாய், நகரமைப்பு குழுமம், நிலத்தடி நீர் ஆணையம், சுற்றுச்சூழல், உள்ளாட்சி, மின் சாரம் ஆகிய துறைகளால் ஆய்வு செய்யப்பட வேண் டும்.

கிரிக்கெட் வாரியம்

இந்த மைதானத்தில் நடத்தப்பட்ட டி-20 போட்டிக் கான அழைப் பிதழில் உரிய அனுமதியின்றி அரசு அதிகாரி களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் (கலெக் டர்) கலந்து கொள்வதை தனிப்பட்ட முறையில் தவிர்த்து இருந் தாலும் அதன் முழுநிலவரத்தை கவர்னர் மாளிகைக்கு தெரிவிக்க தவறிவிட்டீர்கள்.

சீகெம் டெக்னாலஜிஸ் நிறுவன தாமோதரனின் இந்த சட்டவிரோத செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். இத னால் கிரிக்கெட் விளையாட் டிற்கு பாதிப்பு ஏதும் ஏற் படாது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் அசோசியேஷன் கருத்து

இந்த பிரச்சினை குறித்து கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி (சி.ஏ.பி.) செயலாளர் வி.சந்திரன் கூறியதாவது:-

கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ள இடத் தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, அத்துமீறல் எதுவுமில்லை. குத்தகைக்கு விடப்பட்ட 45 ஏக்கரில் 3 ஏக்கர் கழிவு நிலங்கள் மைதானத்தில் உள்ளது. அவை அரசு அதிகாரி களின் அனுமதியுடன் பசுமையாக வைக்கப்பட்டுள் ளது. சி.ஏ.பி. வளாகத்திற்குள் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளுக்கும் நிலத்தடி நீர் அதிகாரிகளிடம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரமைப்பு குழுமம் மற்றும் சம்பந்தப்பட்ட அனை த்து அரசு துறைகளிலும் முறைப்படி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24.10.2020-ல் அமைச்சர வையிலும் குத்தகை வழங் குவது தொடர்பாக விவாதிக் கப்பட்டது. இதுதொடர்பாக அரசுக்கு அனைத்து ஒத்து ழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story