பொதுமக்களிடம் போலீசார் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் அறிவுரை


பொதுமக்களிடம் போலீசார் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் அறிவுரை
x
தினத்தந்தி 14 Nov 2020 5:41 AM IST (Updated: 14 Nov 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் அறிவுரை வழங்கினார்.

பெரம்பலூர், 

தமிழக போலீஸ் (சட்டம்-ஒழுங்கு) கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், தீபாவளி பண்டிகையான இக்காலகட்டத்தில் பொதுமக்கள் நகரங்களில் அதிகமாக கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.

மக்கள் அதிகம் கூடுவதை பயன்படுத்திக் கொள்ளும் சில கயவர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடம் அன்பாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் முடிவில் தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

மரக்கன்றுகள் நட்டார்

இதேபோல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட நிலவரங்கள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் முடிவில் ராஜேஷ்தாஸ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உடனிருந்தார்.

Next Story