தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.61 லட்சம் கடன் உதவி: மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வழங்கினார்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.61 லட்சம் கடன் உதவி: மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Nov 2020 1:44 AM IST (Updated: 15 Nov 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.61 லட்சம் கடன் உதவியை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வழங்கினார்.

ஆட்டையாம்பட்டி, 

வீரபாண்டி ஒன்றியம் சின்னசீரகாபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 91-வது ஆண்டு பவள விழாவையொட்டி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மத்திய கால கடன் மற்றும் பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி வங்கி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு, மகளிர் குழுவினர் உள்பட பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் கடன் உதவியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மனோன்மணி எம்.எல்.ஏ., வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ், சேலம் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி, ஒன்றிய குழு துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அரியானூர் பழனிசாமி, சீரகாபாடி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் செல்லாண்டி, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கல்பாரப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், வேம்படிதாளம் ரமேஷ் தங்கவேல், வையாபுரி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சித்தன் நன்றி கூறினார்.


Next Story