வெலிங்டன் ராணுவ முகாமில் 311 இளம் வீரர்கள் சத்திய பிரமாணம்


வெலிங்டன் ராணுவ முகாமில் 311 இளம் வீரர்கள் சத்திய பிரமாணம்
x
தினத்தந்தி 15 Nov 2020 4:10 AM IST (Updated: 15 Nov 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

வெலிங்டன் ராணுவ முகாமில் 311 இளம் வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி.(மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்) ராணுவ முகாம் உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படும் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் குறிப்பாக ஆயுத பயிற்சி, உடற்பயிற்சி, இந்தி மொழி பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து, சம்பந்தப்பட்ட பணியில் இணைகின்றனர்.

இந்தநிலையில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் நாகேஷ் பேரக்சில் பயிற்சி முடித்த 311 இளம் வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இளம் வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர். முன்னதாக அவர்களது அணிவகுப்பு மரியாதையை முன்னாள் கமான்டென்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 4 இளம் வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story