பீட் மாவட்டத்தில் திராவகம் வீசி இளம்பெண் கொலை ஆண் நண்பருக்கு வலைவீச்சு
பீட் மாவட்டத்தில் திராவகம் வீசி இளம்பெண்ணை கொலை செய்த ஆண் நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
நாந்தெட் மாவட்டம் செல்காவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் சம்பவத்தன்று புனேயில் இருந்து சொந்த ஊருக்கு தனது ஆண் நண்பரான அவினாஷ்(வயது25) என்பவருடன் சென்றார். இந்தநிலையில் அவர்கள் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பீட் மாவட்டம் எலாப் காட் அருகே ஆள்நடமாட்டம் இடத்தில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது, திடீரென அவினாஷ் இளம்பெண் மீது திராவகத்தை வீசிவிட்டு அங்கு இருந்து தப்பியோடிவிட்டார். இதில், இளம்பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
ஆண் நண்பருக்கு வலைவீச்சு
இந்தநிலையில் அந்த வழியாக சென்றவர்கள் இளம்பெண் படுகாயங்களுடன் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாந்தெட் போலீசார் தப்பியோடிய இளம்பெண்ணின் ஆண் நண்பரை தேடிவருகின்றனர். இளம்பெண் மீது ஆண் நண்பர் திராவகம் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story