கர்நாடகத்தில் புதிதாக 1,565 பேருக்கு வைரஸ் தொற்று: பெங்களூருவில், கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்தது


கர்நாடகத்தில் புதிதாக 1,565 பேருக்கு வைரஸ் தொற்று: பெங்களூருவில், கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 16 Nov 2020 4:32 AM IST (Updated: 16 Nov 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 1,565 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்தது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 60 ஆயிரத்து 82 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 2,154 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 647 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று வைரஸ் தொற்றுக்கு மேலும் 21 பேர் இறந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 529 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 8 பேரும், பல்லாரியில் 20 பேரும், பெலகாவியில் 47 பேரும், பெங்களூரு புறநகரில் 14 பேரும், பெங்களூரு நகரில் 840 பேரும், பீதரில் 7 பேரும், சாம்ராஜ்நகரில் 7 பேரும், சிக்பள்ளாப்பூரில் 32 பேரும், சிக்கமகளூருவில் 11 பேரும், சித்ரதுர்காவில் 52 பேரும், தட்சிண கன்னடாவில் 34 பேரும், தாவணகெரேயில் 19 பேரும், தார்வாரில் 16 பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 26 பேரும், ஹாவேரியில் 5 பேரும், கலபுரகியில் 31 பேரும், குடகில் 21 பேரும், கோலாரில் 14 பேரும், கொப்பலில் 5 பேரும், மண்டியாவில் 46 பேரும், மைசூருவில் 71 பேரும், ராய்ச்சூரில் 27 பேரும், ராமநகரில் 17 பேரும், சிவமொக்காவில் 38 பேரும், துமகூருவில் 79 பேரும், உடுப்பியில் 14 பேரும், உத்தர கன்னடாவில் 45 பேரும், விஜயாப்புராவில் 7 பேரும், யாதகிரியில் 7 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

21 பேர் சாவு

பெங்களூருவில் 6 பேர், மைசூருவில் 3 பேரும், பல்லாரி, தட்சிண கன்னடாவில் தலா 2 பேரும், பாகல்கோட்டை, தாவணகெரே, தார்வார், ஹாசன், ஹாவேரி, துமகூரு, உத்தரகன்னடா, விஜயாப்புரா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நேற்று 2,363 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. 27 ஆயிரத்து 146 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 746 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 99 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 94 லட்சத்து 92 லட்சத்து 080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் பெங்களூருவில் 4,003 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

Next Story