அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் அன்னதான முகாம்
அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலை விழா காலத்தில் ஆண்டுதோறும் 63 நாட்கள் அன்னதான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம்,
அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலை விழா காலத்தில் ஆண்டுதோறும் 63 நாட்கள் அன்னதான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சிறப்பு அன்னதான முகாமின் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 12-ந்தேதி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் கோனார்சத்திரம் எதிரே உள்ள மாமுண்டி கோனார் தோப்பு மைதானத்தில் நடைபெற்றது. 10-வது ஆண்டாக நடைபெறக்கூடிய இந்த அன்னதான முகாமை நேற்று சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் முன்னிலையில் போசகர் முரளி சங்க கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். முகாம் வருகிற ஜனவரி மாதம் 13-ந்தேதி வரை 63 நாட்கள் நடைபெற உள்ளது. இங்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வெளியூரில் இருந்து வரக்கூடிய அய்யப்ப பக்தர்கள் தங்கி செல்லும் வகையில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், செயல் தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story