தஞ்சை மாவட்டத்தில் மழை நீடிப்பு; மதுக்கூரில் 57 மி.மீ. பதிவானது
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக பட்சமாக மதுக்கூரில் 57 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழையும், சில மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் இருந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி அன்று தஞ்சையில் மழை இன்றி காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மதியம் 3.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்து. 20 நிமிடம் இந்த மழை கொட்டியது. அதன் பின்னர் மாலை நேரத்திலும் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மழை அளவு
நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மதுக்கூர் 57, அய்யம்பேட்டை 21, வல்லம் 20, அணைக்கரை 16, அதிராம்பட்டினம் 14, மஞ்சளாறு 12, குருங்குளம் 12, நெய்வாசல் தென்பாதி 11 தஞ்சை 11, திருவையாறு 9, வெட்டிக்காடு 6, பட்டுக்கோட்டை 6, கும்பகோணம் 6, பாபநாசம் 6, பேராவூரணி 6, திருவிடைமருதூர் 5, , கல்லணை 4, பூதலூர் 3, திருக்காட்டுப்பள்ளி 3, ஈச்சன்விடுதி 3.
டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story