பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் - புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் - புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2020 10:30 PM GMT (Updated: 17 Nov 2020 1:36 AM GMT)

பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுலகத்திற்கு வந்தார். கலெக்டரை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கலெக்டர் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக பெறுப்பேற்றுக் கொண்டேன். கடந்த 2½ ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றினோன். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் சிறப்பாக எடுத்துச் செல்வதற்கான முழு முயற்சி எடுக்கப்படும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு செயல்முறை அடிப்படையில் சிறப்பாக நடத்தப்படும். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதனை மீண்டும் பெருகாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தை மேம்படுத்துவற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை காலங்களில் குப்பைகள் அகற்ற, கால்வாய் தூர்வார, தண்ணீர் தேங்காமல் இருக்க நடடிவக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story