வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10¾ லட்சம் வாக்காளர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் கிரண் குராலா வெளியிட்டார். இதில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 10¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிரண்குராலா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 43 ஆயிரத்து 472 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 851 பேர், இதர வாக்காளர்கள் 202 பேர் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 199 பேர், இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 826 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 324 பேர், இதர வாக்காளர்கள் 49 பேரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 58 ஆயிரத்து 928 பேர், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 689 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 183 பேர், இதர வாக்காளர்கள் 56 பேரும் உள்ளனர்.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 59 ஆயிரத்து 663 பேர், இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 670 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 951 பேர், இதர வாக்காளர்கள் 42 பேரும், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி (தனி) மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 77 ஆயிரத்து 735 பேர், இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 287 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 393 பேர், இதர வாக்காளர்கள் 55 பேர் உள்ளனர்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவர்களிடமிருந்து வருகிற 21-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை பெறப்படும். கோரிக்கை மனுக்கள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் 5-1-2021 அன்று முடிவு செய்யப்படும். 14-1-2021 தேதி வாக்காளர் துணை பட்டியல் தயாரித்தல், இறுதி வாக்காளர் பட்டியல் 20-1-2021 அன்று வெளியிடப்படும்.
மேலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்படும். வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
2021-ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரால் பெறப்பட உள்ளது. இந்த தகவலை கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தாசில்தார்கள் பிரபாகரன், வளர்மதி, நடராஜன் ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் விஜியகுமார், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ஸ்டாலின் மணி மற்றும் கஜேந்திரன் உட்பட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story