77 சதவீத மதிப்பெண் பெற்று மந்திரி ஏக்நாத் ஷிண்டே பட்டதாரி ஆனார்


77 சதவீத மதிப்பெண் பெற்று மந்திரி ஏக்நாத் ஷிண்டே பட்டதாரி ஆனார்
x
தினத்தந்தி 17 Nov 2020 11:01 PM GMT (Updated: 17 Nov 2020 11:01 PM GMT)

நகர வளர்ச்சி மந்திரி ஏக்நாத் ஷிண்டே பட்டதாரி ஆனார்.

தானே, 

மராட்டிய நகர வளர்ச்சி மந்திரியாக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் தானே மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் உள்ளார். 56 வயதான இவர், தற்போது பட்டதாரி ஆகி உள்ளார்.

இந்த தகவலை அவரது மகனும், கல்யாண் தொகுதி எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

77.25 சதவீத மதிப்பெண்

எனது தந்தை இளம்வயதில் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக படிப்பை பாதியில் கைவிட்டவர். இந்த வயதிலும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்காக யஷ்வந்த் ராவ் சவான் மகராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டப்படிப்பு படித்தார். அந்த தேர்வை எதிர்கொண்டு 77.25 சதவீத மதிப்பெண்களுடன் தற்போது பட்டம் பெற்றுள்ளார்.

விடா முயற்சியை மேற்கொண்டால், யாராக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பதை எனது தந்தையின் தேர்வு முடிவு காட்டுகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Next Story