இந்துத்வா கொள்கை: பா.ஜனதாவிடம் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை சஞ்சய் ராவத் காட்டம்


இந்துத்வா கொள்கை: பா.ஜனதாவிடம் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை சஞ்சய் ராவத் காட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2020 4:34 AM IST (Updated: 18 Nov 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

இந்துத்வா கொள்கையில் பா.ஜனதாவிடம் இருந்து சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை, 

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே நினைவுநாளையொட்டி நேற்று மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் உள்ள அவரது சமாதியில் சிவசேனா மற்றும் கூட்டணி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி. யுமான சஞ்சய் ராவத்தும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரிடம், இந்துத்வா கொள்கையில் இருந்து சிவசேனா விலகி செல்வதாக பா.ஜனதாவினர் அடிக்கடி கூறி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

தீவிர இந்துத்வா

சிவசேனா தீவிர இந்துத்வா கொள்கை கொண்ட கட்சி. இன்றைக்கும் அப்படி தான். நாளைக்கும் அப்படித் தான் செயல்படுவோம். இந்துத்வா கொள்கை பிரச்சினையில் நாங்கள் வேறு எந்த கட்சியிடமும் இருந்தும் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை. நாட்டுக்கு தேவைப்படும் போதெல்லாம், சிவசேனா இந்துத்வா வாளை ஏந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனா மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story