புதிதாக 72 பேருக்கு கொரோனா: 96 சதவீதம் பேர் குணமடைந்தனர்
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 72 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 331 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 971 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. 36 ஆயிரத்து 409 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 843 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
96 சதவீதம் பேர் குணம்
அதாவது 256 பேர் ஆஸ்பத்திரிகளிலும் 587 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 608 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு என்பது 1.67 சதவீதமாகவும், குணமடைவது 96.01 சதவீதம் ஆகவும் உள்ளது.
Related Tags :
Next Story