மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தற்கொலை + "||" + In Nagercoil College student commits suicide

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தற்கொலை

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தற்கொலை
நாகர்கோவிலில் மரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
நாகர்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேலப்பெருவிளை பகுதியை சேர்ந்த தமிழ் செல்வனின் மகன் அனிஷ் (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா காரணமாக கல்லூரிகள் தற்போது திறக்கப்படாததால், பால் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அனிஷ் பால் வியாபாரத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய தாயார் திட்டியதாக தெரிகிறது. இதனால் அனிஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஷ் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

இதனால் அவரை பெற்றோர் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வெள்ளை ஓடைக்கரை பகுதியில் ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அனிஷ் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், அனிஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருந்தாலும் மேல் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
2. நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு தளவாய் சுந்தரம் பங்கேற்பு
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.
5. நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள் பொதுமக்கள் பாராட்டு
நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர். இதை பொதுமக்கள் பாராட்டினர்.