விமான நிலையம் விரிவாக்கம்: மாற்றுப்பாதையில் மழைநீர் செல்ல குழாய் அமைக்கும் பணி


விமான நிலையம் விரிவாக்கம்: மாற்றுப்பாதையில் மழைநீர் செல்ல குழாய் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 18 Nov 2020 10:30 AM GMT (Updated: 18 Nov 2020 10:22 AM GMT)

விமான நிலையத்தில் இருந்து மழைநீர் செல்ல மாற்றுப்பாதையில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

வேலூர்,

வேலூர் அருகே அப்துல்லாபுரத்தில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. ஓடுதளம் - டெர்மினல் கட்டிடம் இடையே செல்லும் தார்வழி சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இதனால் தார்வழி சாலையை பயன் படுத்தும் இலவம்பாடி, கம்ம வார்பாளையம் போன்ற கிராம மக்கள் பயன் பாட்டுக்காக டெர்மினல் கட்டிடத்தின் பின்புறம் வழியாக சுமார் 900 மீட்டர் தூரம் மாற்றுப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மணல் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலையப்பகுதியில் இருந்து வெளிவரும் மழைநீர் இந்த சாலையோரம் தேங்கியது. இதனால் சாலை சேதமடையும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாற்றுச்சாலையில் மழைநீர் செல்ல குழாய் அமைக்கும் பணி நேற்று நடந்தது. பொக் லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை தோண்டப் பட்டு குழாய் அமைக்கப் பட்டது. இந்த பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வை யிட்டனர். இப்பணியின் காரணமாக அங்கு வந்த வாகன ஓட்டிகள் சிலர் திரும்பி சென்றனர். சிலர் அருகில் இருந்த சேறும், சகதியுமான பகுதி வழியாக சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாற்றுப்பாதை மணல் சாலையாக அமைக்கப் பட்டுள்ளது. சில வாரங்கள் கழித்து அடுத்த கட்டமாக தார்சாலையாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

Next Story