தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது


தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2020 5:45 PM IST (Updated: 18 Nov 2020 5:36 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் கொலையில் அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 37). தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். இவர் இரவில் நண்பர்களுடன் தனது வயலில் உள்ள குடிசையில் தூங்கிய போது கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் முத்துக்குமரனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே சம்பவத்தன்று இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டதும், அதனைத் தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முத்துக்குமரனின் நண்பர்கள் ஆலந்தூர் அறிவழகன் (30), மதுரை மாரிமுத்து (25), நெல்லியேந்தல்பட்டி பாபு (24), வெள்ளரிப்பட்டி விஜயசுந்தர் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Next Story