புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
புதுவையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுவை உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் நாராயணன் என்ற விஜய் (வயது 22). தச்சு தொழிலாளி. இவரும் கடலூரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
புதுமண தம்பதிகள் புதுவையில் வசித்து வந்தனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபிநயாவை அவரது பெற்றோர் சீர் கொடுத்து அழைத்து சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் தனது தாய் மாலாவை ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக நாராயணன் கூறியுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாய் மாலா கொடுத்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story