பொதுப்பணி துறைக்கு சொந்தமான 15 சாலைகளில் கனரக வாகன சுங்க கட்டணம் அதிகரிப்பு


பொதுப்பணி துறைக்கு சொந்தமான 15 சாலைகளில் கனரக வாகன சுங்க கட்டணம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 4:17 AM IST (Updated: 20 Nov 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 15 சாலைகளில் கனரக வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 15 சாலைகளில் கார், ஜீப், அரசு பஸ், பள்ளி பஸ்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ஆண்டு தோறும் சாலை ஒப்பந்ததாரருக்கு ரூ.350 முதல் 400 கோடி வரை செலுத்தி வருகிறது.

இதை ஈடு செய்யும் வகையில் மாநில அரசு பொதுப்பணி துறைக்கு சொந்தமான 15 சாலைகளில் கனரக வாகனங்களின் சுங்க கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. 10 சதவீதம் கட்டண உயர்வு இருக்கும். இது தேசிய நெடுஞ்சாலைகளி்ல் விதிக்கப்படும் கட்டணத்தை விட குறைவு தான். இதனால் மாநில அரசு ஆண்டு தோறும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்த வேண்டியது இருக்காது.

மின் இணைப்பு

இதேபோல நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் விவசாய பம்ப் ஷெட்டுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு விவசாய பம்ப் ஷெட்டுகளுக்கு தினமும் 8 மணி நேரம் நிரந்தர மின்வினியோகம் பரிசோதனை அடிப்படையில் கொடுக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

Next Story