மாவட்ட செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Nationalist Congress Party senior leader Eknath Katsek admitted to Corona Hospital

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை,

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே (வயது 68). இவருக்கு நேற்று பிற்பகல் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகளுக்கு பாதிப்பு

ஏக்நாத் கட்சேயின் மகள் ராகினிக்கு கடந்த 15-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது தந்தையான ஏக்நாத் கட்சேவும் தொற்று நோய்க்கு ஆளாகி உள்ளார்.

பா.ஜனதாவில் மூத்த தலைவராக விளங்கிய ஏக்நாத் கட்சே கடந்த மாதம் அந்த கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் இணைந்தவர் ஆவார்.

மராட்டியத்தில் ஏற்கனவே துணை முதல்-மந்திரி அஜித்பவார், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏறக்குறைய 15 மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் ஐ.சி.யூ.வில் அனுமதி
முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் கொரோனா மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. இனி வீட்டிற்கே வரும்...! ஆன்லைன் மதுவிற்பனைக்கு டெல்லி அரசு அனுமதி
டெல்லியில் ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வினியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
3. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது - அமைச்சர் பன்னீர்செல்வம்
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
4. ஆந்திராவில் கொரோனா உயிரிழப்பு: இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அரசு அனுமதி
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து உள்ளது.
5. மெர்சல் பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜய் நடித்த மெர்சல் பட தயாரிப்பாளர் முரளி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.