பொய்கை சமத்துவபுரத்தில் கழிவுப்பொருட்களை உரமாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


பொய்கை சமத்துவபுரத்தில் கழிவுப்பொருட்களை உரமாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 10:00 AM GMT (Updated: 20 Nov 2020 10:29 AM GMT)

பொய்கை அருகே சமத்துவபுரத்தில் கழிவுபொருட்களை உரமாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரி களை முற்றுகையிட் டனர். இதனால் பர பரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

வேலூரை அடுத்த பொய்கை அருகே உள்ள சமத்துவபுரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் மத்தியில் கழிவுப்பொருட்களை கொண்டு வந்து அதை பிரித்து எடுத்து உரமாக்கும் திட்டத்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று பொய்கை சமத்துவபுரத்தில் நடந்தது.

இதை அறிந்த சமத்துவ புரத்தில் வசிக்கும் பொது மக்கள் 300-க்கும் மேற் பட்டோர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி களை முற்று கையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந் ததும் விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனி வாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட பொது மக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

அப்போது பொதுமக்கள் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வந்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும். பொய்கை ஊராட்சியில் நீர்நிலைகள் அருகே அதிக அளவில் அரசுக்கு சொந்த மான இடங்கள் இருக்கும் போது இந்த குடியிருப்பு மத்தியில் இந்த திட்டத்தை கொண்டு வருவதை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து விளக்கியும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. அதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.

Next Story