தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்யும் - துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி


தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்யும் - துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2020 3:45 PM GMT (Updated: 20 Nov 2020 3:39 PM GMT)

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்யும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருஞான சம்பந்தம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியம், தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு வருகிற 21, 22 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம்(டிசம்பர்) 12, 13 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. எனவே தகுதியுள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தகுதியற்ற வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்குப்பதிவு உள்ளவர்கள் ஆகியோர்களை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் பாரதிமோகன், பரசுராமன், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம்குமார், ராமச்சந்திரன், ராஜேந்திரன், ரெத்தினசாமி, தவமணி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பிரிவு செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில் மறைந்த அமைச்சர் துரைக் கண்ணுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். தறபோது வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது. வேல் யாத்திரை தடையால் கூட்டணி பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு கூட்டணி வேறு, அரசியல் கட்சிகளின் கொள்கை என்பது வேறு. சசிகலா விஷயத்தில் முதல்-அமைச்சர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதே முடிவு தான் எனது முடிவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story