இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2020 10:22 PM IST (Updated: 20 Nov 2020 10:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிதம்பரநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிதம்பரநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில இணை செயலாளர் அப்பாத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்துறை அமைச்சர் அறிவித்த தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 59 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, புறநகர் செயலாளர் ராஜா, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ், மாவட்ட தலைவர் உமாசங்கர், பொருளாளர் டேனியல், மாநகர பொருளாளர் பாலா, மாநகர தலைவர் காஸ்ட்ரோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story