கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபர் கைது


கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2020 3:08 AM IST (Updated: 21 Nov 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

உல்லாஸ்நகரில் கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மும்பை, 

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியை சோ்ந்தவர் கைலாஷ். தொழில் அதிபர். இவரது மகன் பவன்(வயது25). கடந்த 16-ந் தேதி தொழில் அதிபர் ஹில்லைன் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் 3 நாட்களாக மகன் பவனை காணவில்லை என கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே உல்லாஸ்நகர் பகுதியில் நேற்று முன்தினம் காரில் இருந்து அழுகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில், அது மாயமான பவன் என்பது தெரியவந்தது. யாரோ அவரை கொலை செய்து காரில் போட்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நகைக்காக கொலை

இதையடுத்து போலீசார் பவனுடன் கடைசியாக போனில் பேசிய அவரது நண்பன் தீபக்கை(30) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் பவனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பவன் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்து தீபக்கிடம் கொடுத்து உள்ளார். இதில் அவர் அந்த நகைகளை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தீபக், பவனை கொலை செய்தது தெரியவந்தது.

Next Story