மராட்டியத்தில் 3-வது நாளாக 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு மேலும் 155 பேர் பலி


மராட்டியத்தில் 3-வது நாளாக 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு மேலும் 155 பேர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2020 3:21 AM IST (Updated: 21 Nov 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் 155 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக மாநிலத்தில் தொற்று நோய் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி புதிதாக 5 ஆயிரத்து 640 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 17 லட்சத்து 68 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 லட்சத்து 42 ஆயிரத்து 916 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதில் நேற்று மட்டும் 6 ஆயிரத்து 945 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

155 பேர் பலி

மாநிலம் முழுவதும் தற்போது 78 ஆயிரத்து 272 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 155 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

இதுவரை மராட்டியத்தில் 46 ஆயிரத்து 511 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் 1 கோடியே 35 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story