மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் தமிழர் விடுதலை களத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Tamil Liberation Front protests in Palaiyankottai

பாளையங்கோட்டையில் தமிழர் விடுதலை களத்தினர் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் தமிழர் விடுதலை களத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழர் விடுதலை களத்தினர் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை, 

தமிழர் விடுதலை களத்தினர் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை மாவட்ட செயலாளர் முத்துகுமார் பாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் மணிபாண்டியன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெகன்பாண்டியன், மாவட்ட தலைவர் சுரேஷ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்பாபு வரவேற்று பேசினார். தமிழர் விடுதலை களத்தின் தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான், பல்லன் ஆகிய 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சுபாஷ்பாண்டியன், மகளிர் அணி செயலாளர் மகரஜோதி, வக்கீல் அணி செயலாளர் கனகசுந்தரி, மாநில துணைதலைவர் சாமி, துணைச்செயலாளர் முத்துப்பாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், தென்மண்டல செயலாளர் ஜெயராஜ் பாண்டியன், போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட குழு சார்பில் நேற்று கோர்ட்டு ரோட்டில் உள்ள கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரியில் 8 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 8 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
5. கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு இந்திய கம்யூனிஸ்டு- விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்-விவசாயிகள் சங்கத்தினர் கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.