தேர்தல் நேரத்தில் மட்டும் தான் சிவசேனா அரசியல் செய்யும் மந்திரி ஆதித்ய தாக்கரே சொல்கிறார்


தேர்தல் நேரத்தில் மட்டும் தான் சிவசேனா அரசியல் செய்யும் மந்திரி ஆதித்ய தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 22 Nov 2020 4:30 AM IST (Updated: 22 Nov 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் சிவசேனா அரசியல் செய்யும் என்று மந்திரி ஆதித்ய தாக்கரே கூறினார்.

மும்பை,

தானே மாவட்டம் கல்யாணில் பத்ரிபுல் ரெயில்வே மேம்பால தொடக்க விழாவில் மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த திட்டம் பல்வேறு இடையூறுகளை சந்தித்தது. இதேபோல எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு வளர்ச்சி பணிகளை திறம்பட மேற்கொள்ளும். மும்பை- நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் அடுத்த ஆண்டு நிறைவுபெறும்.

சிவசேனாவை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் செய்யும். தேர்தல் முடிந்ததும் பணிகளை செய்ய தொடங்கி விடுவோம். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களது கட்சி அதுபோன்று ஒருபோதும் செயல்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட கல்யாண் தொகுதி எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே பேசுகையில், இந்த பத்ரிபுல் ரெயில்வே மேம்பாலம் அடுத்த 30 நாளில் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்றும், இது கல்யாண்-டோம்பிவிலி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமையும் என்றும் கூறினார்.

Next Story