குளச்சலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனுக்கு வெண்கல சிலை
குளச்சலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனுக்கு வெண்கல சிலை அமைப் பதற் கான அடிக்கல்லை பிஷப் நசரேன் சூசை நாட்டினார். இதில் 5 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
குளச்சல்,
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜரின் ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் லூர்தம்மாள் சைமன். இவர் மீனவ சமுதாய மக்களுக்காக அரும்பாடு பட்டவர். உலக மீனவர் தினமான நேற்று குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நல சங்கம் சார்பில், குளச்சல் மரமடி சந்திப்பில் லூர்தம்மாள் சைமனுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் கோட்டார் பிஷப் நசரேன் சூசை கலந்து கொண்டு ஜெபம் செய்து அடிக்கல் நாட்டினார்.
எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், சுரேஷ் ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட துணைத்தலைவர்கள் மகேஸ் லாசர், முனாப், தமிழ் நாடு மாநில மீனவர் கூட்டுறவு சங்க இணைய தலைவர் சேவியர் மனோகரன், குமரி மாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் ஸ்டீபன், குளச்சல் தொகுதி அ.தி.மு.க.செயலாளர் ஆறுமுகராஜா, நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் தொகுதி ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பனிமயம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் மற்றும் விசைப்படகு சங்க நிர்வாகிகள், மீனவர் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல பங்குத்தந்தை மரிய செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
Related Tags :
Next Story