மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா + "||" + Corona for 13 more in Virudhunagar district

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 4,214 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 731 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

15 ஆயிரத்து 449 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,098 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 57 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

13 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அடைந்தவர்கள் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்ட சுகாதார துறையினர் பாதிப்பு அடைந்தவர்களின் பகுதிகளை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இதனால் பாதிப்பு அடைந்த பகுதிகள் எவை, எவை என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

தொடர்ந்து மாவட்ட சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிப்பதில் அக்கறை காட்டாத நிலை நீடிக்கிறது.

அறிவுறுத்தல்

தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. மாநில அரசு அடுத்து வரும் 20 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ள நிலையில் மாவட்ட சுகாதார துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்யாத நிலையே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.