மாவட்ட செய்திகள்

கோரிக்கை அட்டை அணிந்து கிராம உதவியாளர்கள் போராட்டம் + "||" + Village assistants struggle wearing demand card

கோரிக்கை அட்டை அணிந்து கிராம உதவியாளர்கள் போராட்டம்

கோரிக்கை அட்டை அணிந்து கிராம உதவியாளர்கள் போராட்டம்
அலங்காநல்லூர் பகுதியில் கோரிக்கை அட்டை அணிந்தபடி கிராம உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் பகுதியில் வாடிப்பட்டி தாலுகா அளவிலான தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கருப்பையா தலைமையில் செயலாளர் முருகன், பொருளாளர் அழகுபாண்டி, மாநில இணைச் செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

போராட்டம்

பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்கள் ஓய்வூதிய குறைபாடுகளை நீக்குவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பணி செய்தவாறு ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, வருகிற 26, 27-ந் தேதிகளில் கருப்பு கொடி அணிந்து பணி செய்வது, டிசம்பர் மாதம் 4-ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 12-ந் தேதி முதல் பணிகளை புறக்கணிப்பு செய்வது போன்ற 4 கட்ட போராட்டங்களை நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை தபால் நிலையத்தை 3-வது நாளாக முற்றுகை; 40 பேர் கைது
தஞ்சையில் 3-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய கலால் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2. திருச்சியில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் செல்ல முயன்ற 48 விவசாயிகள் கைது
திருச்சியில் இருந்து அய்யாக்கண்ணு தலைமையில் ரெயிலில் டெல்லிக்கு செல்ல முயன்ற 48 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
3. ஓய்வூதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் நாகர்கோவிலில் 96 பேர் கைது
அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 96 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்
விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தஞ்சையில், 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
தஞ்சையில் 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 5 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.