மாவட்ட செய்திகள்

டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Officers confiscated 20 cylinders used in tea shop and cafe

டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
காட்பாடி பகுதியில் டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை.
காட்பாடி,

காட்பாடி பகுதியில் டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று காட்பாடி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வணிக நோக்கிலான சிலிண்டர்களை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 20 கடைகளில் இருந்த 20 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் 20 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டுமாமனாரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை
சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டுமாமனாரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார்.
2. கஜா புயலின் போது சிக்கியது: கடலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பல் அப்புறப்படுத்த நடவடிக்கை
கஜா புயலின்போது காரைக்காலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகங்களில் சோதனை அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
4. திருச்சி விமான நிலையத்தில் 120 பவுன் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் 120 பவுன் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. போதை பொருள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 479 பேர் கைது போலீசார் நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் போதை பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 479 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை