மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு + "||" + Special Camp Collector survey of 1,043 polling stations to add name to voter list

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,043 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.
திருப்பூர்,

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி, திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்த சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் 2 ஆயிரத்து 493 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,043 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு முகாமை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருமுருகன் பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் என்றும், பெறப்படும் படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளின் படி கள விசாரணை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடிவு செய்யவேண்டும் என்றும் அங்குள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இன்று நடக்கிறது

இன்று (ஞாயிற்றுக்கிழமை) , அடுத்த மாதம் 12-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பொதுமக்களே கேட்டுக் கொண்டார்.இந்த ஆய்வின்போது சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் வாசுகி, தாசில்தார்கள் ஜெகநாதன் (அவினாசி), பாபு (திருப்பூர் வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார்.
2. கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
3. ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
4. சேலம் சிவதாபுரம், அம்மன் நகர் பகுதிகளில் நிவர் புயல் மழையால் தண்ணீர் புகுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை
சேலம் சிவதாபுரம் மற்றும் அம்மன்நகர் பகுதிகளில் நிவர் புயல் மழையால் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் 660 தற்காலிக தங்கும் இடங்கள் கலெக்டர் பேட்டி
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 660 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை