ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 Nov 2020 3:00 AM IST (Updated: 23 Nov 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள உடையார்குளம் தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (வயது 22). இவர் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

நாங்குநேரி தம்புபுரம் பாஸ்கர் தெருவை சேர்ந்தவர் பழனி (59). இவர் மீது கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி பூல்பாண்டி மற்றும் பழனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இதேபோல் நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்த தங்கபாண்டி மகன் செல்வம் (25), தாழையூத்து ராம்நகரை சேர்ந்த ராமர் பாண்டி மகன் முத்துப்பாண்டி (29) மற்றும் ராஜவல்லிபுரம் அருமைராஜ் மகன் அந்தோணிராஜ் (28) ஆகிய 3 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களை தாழையூத்து போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இதையடுத்து 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தனர்.

Next Story