பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் நன்றியுரை கூறினார். கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, அனைவருக்கும் பயனளிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள், வழக்குகள், 17பி குற்றக்குறிப்பாணைகள், தற்காலிக பணிநீக்கம், பணியிட மாறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story